மனிதர்களால் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் அதிக அளவு வெற்றி
பெற்றது, `ஆஸ்பிரின்'. இதில் உள்ள முக்கியப் பொருள், வில்லோ மரத்திலிருந்து
பெறப்படுகிறது.
கி.மு.
1500-ல் ஆஸ்பிரின் வலிநிவாரணியாக அறியப்பட்டது. கி.பி. 1828-ல் `சாலிசின்'
(Salicin) என்பது தனியாகப் பெறப்பட்டது. 1897-ல் ஜெர்மனியில் உள்ள பேயர்
(Bayer) தொழிற்சாலையில் மருந்து நிபுணர் பெலிக்ஸ் ஹாப்மேன், `அசிட்டைல்
சாலிசிலிக்' (Scrtyl Salicylee) என்ற அமிலத்தைச் செயற்கை முறையில்
தயாரித்தார். 1899-ல் அது முதல்முறையாக `ஆஸ்பிரின்' என்று அழைக்கப்பட்டது.
இன்று
தினமும் உலகம் முழுவதும் 13 கோடிக்கு மேற்பட்ட ஆஸ்பிரின் மாத்திரைகள்
மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பேயர் நிறுவனம்
மட்டும் தயாரிக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால்
சந்திரனை தொட்டுவிட்டுத் திரும்பலாம்!
No comments:
Post a Comment